ஏனைய செய்தி
6 வயதில் ரவுடிசம் செய்த மகனை அடித்து கொன்ற தந்தை
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 08:19.21 மு.ப GMT ]
சீனாவில் ஆறு வயதிலேயே தன்னுடன் படிக்கும் மாணவர்களை மிரட்டி வந்த மகனை, தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செங் ஜங்பெங். இவரது மகன் ஜியாஹோ சிறு வயது முதலே கொடூர குணம் நிறைந்தவனாக இருந்துள்ளான்.

இதனால் பள்ளிக்கு சென்றால் திருந்திவிடுவான் என எதிர்பார்த்த தந்தை, பள்ளியில் சேர்த்துள்ளார்.

ஆனால் பள்ளியில் அவனது கொடூர குணம் மேலும் மேலும் வளரத் தொடங்கியது, ஆறு வயதிலேயே தன்னுடன் படிக்கும் சிறுவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். இதனையடுத்து பலமுறை கண்டிப்புடன் பேசியும், தண்டித்தும் திருந்தியபாடில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி தந்தை அழைத்த ஆசிரியை, வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை, அடித்து உதைத்து மிரட்டி ஜியாஹோ பணம் பறிப்பதாகவும், அந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்து அவனை திருத்துங்கள் என செங் ஜங்பெங்-கிற்கு ஆசிரியர் அறிவுரையும் தந்துவிட்டுச் சென்றார்.

அன்றிரவு மனைவி வேலைக்குச் சென்றிருந்த போது, தனிமையில் அமர்ந்திருந்த தந்தை, மகனை எப்படி திருத்துவது? என தீவிரமாக ஆலோசித்தார்.

சுவற்றில் மாட்டியிருந்த சவுக்கை எடுத்து, கை ஓயும் வரை சுமார் 1/2 மணி நேரம் விளாசிய அவர், இரவு 11 மணியளவில் மகனை படுக்க வைத்தார்.

இரவு 2 மணியளவில் திருந்தாத மகனை பாசத்தோடு பார்க்கச் சென்ற தந்தை திடுக்கிட்டார். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம், உடைகளை நனைத்த நிலையில் உடல் சில்லிட்ட நிலையில் இருந்த மகனை மருத்துவமனையில் அனுமதித்தார்.

தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும், சிறுவன் ஜியாஹோ சிகிக்சை பலனின்றி சில மணி நேரங்களில் உயிரிழந்தான். ஜென் சுங்பெங்-கை கைது செய்த லோங்காங் மாவட்ட பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் கூறுகையில், என் மகனை நானே அடித்து கொன்றுவிட்டேன், இனி நான் என்ன சொன்னாலும், அது அர்த்தமற்ற வார்த்தையாக தான் தோன்றும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் வீசிய பெரும் சூறாவளிக்கு அமெரிக்க புறநகர் சூறையாடல்
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி
மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!
பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]