வீடு திரும்பினார் ஹிலாரி கிளிண்டன் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 04:34.21 மு.ப GMT ]
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, வீடு திரும்பியுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில், ஹிலாரியின் தலையில் மூளைக்கும், மண்டை ஓட்டிற்கும் இடையில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த சிகிச்சையில் ஹிலாரி கிளிண்டனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.
இந்நிலையில் அவர் குணமடைந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதால், நேற்று காலை அவர் தனது கணவர் பில் கிளிண்டன் மற்றும் மகள் செல்சியாவுடன் நியூயார்க் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
பூரண குணமடைந்த அவர் மீண்டும் தனது பணியை தொடர ஆர்வமுடன் உள்ளார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் இன்னும் பூரண குணம் அடையவில்லை, மேற்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு செல்கிறார் என்று அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்து 2016ம் ஆண்டு தேர்தலின் போது, ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]