அமெரிக்காவில் ரயிலில் இருந்து நபரொருவரை கீழே தள்ளி விட்டு கொலை செய்த பெண், நீதிமன்றத்தில் பலமாக சிரித்தார்.அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் இந்தியரான சுனந்தோ சென் என்பவர் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி சுரங்க ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம பெண் அவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டார். அதன் பின் அந்த பெண் தப்பி சென்றார்.
இந்த விபரங்கள் அங்கிருந்த வீடியோ கமெராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து குறித்து பெண்ணை பற்றி துப்பு கொடுப்பவருக்கு 12,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்தனர்.
தற்போது இந்தக் கொடூரக் கொலையை செய்ததாக எரிகா என்ற 31 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீதான கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நியூயார்க் நீதிமன்றத்தில் எரிகா மீது நேற்று விசாரணை நடந்தது. விசாரணையின் போது, எரிகா தனது வக்கீலுடன் பலமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதனால் கோபமான நீதிபதி, சிரிப்பதை நிறுத்தும் படி கூறினார்.
இந்தியரை கொன்றவுடன் தலைமறைவான எரிகா, ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் சகட்டு மேனிக்கு புகைத்து கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் குற்றஉணர்வு இல்லாமல் இருக்கும் இவரது செயல் தொடர்பாக, இவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏதாவது உள்ளதாக என்பதை கண்டறியும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து எரிகாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, மனநல மருத்துவமருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். |