இத்தாலி செய்தி
செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்
[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:42.17 மு.ப GMT ]
இரத்தத்தில் உள்ள செல்களை ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளை கண்டறிய வழிவகுத்த இத்தாலிய நாட்டு பெண் விஞ்ஞானி ரீட்டா லெவி மோண்டால்ச்சினி நேற்று காலமானார்.

இத்தாலி நாட்டின் உள்ள வடக்கு தூரின் பகுதியில் 1909ம் ஆண்டு வசதியான யூத குடும்பத்தில் பிறந்தவர் ரீட்டா மெலவி மோண்டால்சினி.

கல்லூரிப்படிப்பை முடித்து மருத்துவ பட்டம் பெற்ற போதும் மருத்துவ ஆராய்ச்சியை தொடரவிடாமல், இத்தாலிய பாசிஸ்ட் அரசு அவருக்கு தடை விதித்தது.

இந்த தடையையும் மீறி ரத்தத்தில் உள்ள செல்களை பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அமெரிக்காவின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி கோஹன் என்பவருடன் இணைந்து நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, 1986ம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது ஆராய்ச்சிக்கள் மருத்துவ உலகுக்கு கொடையாக மாறிய பின்னர், இத்தாலியின் உயர்ந்த ஆராய்ச்சியாளராக கௌரவப்படுத்தப்பட்டார்.

இவர் 100 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சியிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று உறங்கிய நிலையிலேயே காலமானார்.

'செல்களின் பெண்' என இத்தாலியர்களால் அழைக்கப்படும் லெவியின் மரணம், மனித குலத்திற்கு மாபெரும் இழப்பாகும் என ரோம் நகரின் மேஜர் கியானி அலெமனோ தெரிவித்துள்ளார்.

'20 வயதிலிருந்ததை விட 100 வயதில் எனது சிந்தனை மிக உச்சமாக இருக்கிறது.

இதற்கு காரணமான அனுபவத்திற்கு நன்றி சொல்கிறேன்' என ஒரு பேட்டியில் லெவி தெரிவித்திருந்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நைஜீரியா யுரேனிய சுரங்கத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 21 பேர் பலி
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
ஈக்குவடார் செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில் மோதியதால் செயலிழப்பு
பாகிஸ்தானுக்கான சவுதி அரசின் உதவி தொகை 15 பில்லியன் டொலராக உயர்வு
ஆளில்லா விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா ஒப்புதல்
இந்தோனேசியாவில் சன்பாத் எடுக்க வந்த முதலையைக் கண்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்
பிரான்ஸ் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிறை
இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை
பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]