| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| தாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல் |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 05:25.48 மு.ப GMT ] |
தாய்லாந்தில் புத்தபிட்சுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால், மடாலயங்கள் மூடப்பட்டுள்ளன.புத்த மதம் தழைத்தோங்கி காணப்பட்ட சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில், புத்த துறவிகள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர்.
பிரச்னைகளை தீர்ப்பதில் பஞ்சாயத்து தலைவர் போலவும், திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு சடங்கு செய்பவர்களாகவும் இவர்கள் வலம் வந்தனர்.
புத்த துறவிகள் மது அருந்துகின்றனர், நீல படங்கள் பார்க்கின்றனர், பெண்களோடு தொடர்பு வைத்து கொள்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியானதால் புத்த துறவிகள் மீதான மதிப்பு குறைந்து விட்டது.
முன்பெல்லாம் நிறைய பேர் புத்த மடாலயங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று புத்த மத குருவாக மாறி விடுவர். இப்போது யாரும் மடாலயங்களுக்கு சென்று பயிற்சி பெற விரும்புவதில்லை.
இளைஞர்கள் யாரும் புத்த மடாலயங்களுக்கு பயிற்சி பெற வராததால் வயதான துறவிகள் தான், இப்போது மடாலயங்களை பராமரித்து வருகின்றனர். இதனால் பல மடாலயங்கள் புத்த பிட்சுகள் இல்லாமல் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் அண்டை நாடான மியான்மரில் புத்த மடாலயங்களில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கிருந்து இளம் புத்த பிட்சுகளை வரவழைக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|