பிரான்ஸ் செய்தி
பிரான்சில் ரோமா குடியிருப்புகளை காலி செய்வதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 10:31.50 மு.ப GMT ]
பிரான்சில் ரோமா இனத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள் சாலையோரங்களிலும், நகர்ப்பகுதியிலும் கூடாரமிட்டு இருந்ததை பிரித்து விடும்படி பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இடதுசாரிக் கட்சியின் ஆட்சி வந்த பின்னர் தங்களுக்கு ஜனாதிபதி ஹோலாண்டின் (Hollande) ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களில் மூன்றில் இரு பங்கினர் அவரை நாடி இங்கு வந்துள்ளனர்.

ஹோலாண்ட், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ரோமாமக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் தற்போதும் முந்தைய நிலை தான் நீடிக்கிறது என்று ஐரோப்பிய ரோமா உரிமை மையத்தின் விக்டடோரியா வாசி (Victoria Vasey) ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைக்கான ஐரோப்பிய அமைப்பு, 2012ம் ஆண்டு 11,803 பேர் தங்களின் கூடாரங்களைப் பிரித்து விட்டு அந்தந்த இடங்களை விட்டு அகன்று விடுமாறு அரசு உத்தரவு விட்டதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரோமானியர்களின் கூடாரத்தைப் பிரித்து அவர்களை அனுப்புவது சர்வதேச மனித உரிமை மரபுகளை மீறுவதாகும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவு பிரான்சை கடுமையாக எச்சரித்துள்ளது.

இது குறித்து பிரான்சு அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் கூடராத்தை சுற்றி சுகாதார சீர்கேடான சூழ்நிலை இருப்பதால் நோய்த்தொற்று அபாயம் உண்டாகும் என்று அஞ்சி அவர்களை காலி செய்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் பிரான்சு முழுவதும் கூடாரமிட்டு இருக்கும் 15,000 முதல் 20,000 வரையிலான ரோமா இனத்தாரைத் திரும்பவும் அவர்களின் தாயகமான ரோமேனியாவுக்கோ(Romania) அல்லது பல்கேரியாவுக்கோ (Bulgaria) திருப்பி அனுப்பும் முயற்சி வீண் ஆகி விட்டது. ஏனெனில் அவர்கள் மீண்டும் இங்கே வந்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு காரணம் அவர்களுடைய நாட்டில் காலங்காலமாக நிலவி வரும் சமூக ஏற்றத்தாழ்வே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஜவர் பலி..!
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு: சுற்றுலாப் பயணம் ரத்து
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீப் பரவல்! ஹீத்ரோ ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன! (காணொளி இணைப்பு)
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள்
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ]
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்]
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] []
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்]
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]