பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
எனவே பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட்டில் கொண்டு வரப்பட்டது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இந்த செனட்டில் அதிகளவு இருப்பதால், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 89 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன.
இதனையடுத்து இம்மசோதாவை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த மசோதாவுக்கு குடியரசு கட்சிப்பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜோ பிடன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
இதன் பின் பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 257 வாக்குகளும், எதிராக 167 வாக்குகளும் கிடைத்தன. இரண்டு சபைகளிலும் ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, மசோதா ஜனாதிபதி ஒபாமாவின் ஒப்புதலோடு அமுலுக்கு வரும்.
இம் மசோதாவின்படி, தனிநபர் வருமானம் 4 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருந்தாலோ அல்லது குடும்ப வருமானம் 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக இருந்தாலோ அவர்கள் பணக்காரர்களாக கருதப்பட்டு, அதிக வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]