பிரபல பாடகர் ஜஸ்டினின் காரை பின்தொடர்ந்த நபர் பரிதாபமாக பலி
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 03:13.56 பி.ப GMT ]
அமெரிக்க பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரை, பின்தொடர்ந்து சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்க பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர்(வயது 18). இவரது கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, புகைப்படம் எடுப்பதற்காக நபரொருவர் பின் தொடர்ந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரின் கார் வேகமாக பயணித்து கொண்டிருந்தது.
அவருக்கு பின்னே மற்றொரு காரில் ஒருவர் தொடர்ந்து வந்தார். போக்குவரத்து சிக்னலில் பீபரின் கார் நின்றபோது, பின் தொடர்ந்தவர் தனது காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பெராரி காரை படம் பிடித்தார்.
அதன் பின் தனது காருக்கு திரும்பினார். ஆனால் எதிர்பாராதவிதமாக மற்றொரு கார் மோதியதில் கீழே விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பீபர், இந்த சம்பவத்தின் போது நான் அங்கு இல்லாத நிலையிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இச்சம்பவத்தின் மூலம் புதிதாக சட்டங்கள் இயற்றப்படுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]