தென் கொரியாவுடனான உறவை மேம்படுத்த ஆவலாக உள்ளேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் யுன் தெரிவித்துள்ளார்.வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் யுன் கூறுகையில், இந்த புதிய ஆண்டில் ஒட்டு மொத்த கொரிய தேசமும்(வட, தென் கொரியா) ஒன்றிணைய வேண்டும்.
வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையேயுள்ள பிரிவினை நீக்கப்பட்டு, முரண்பாடுகள் களையப்பட்டு இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இரு நாடுகள் ஒன்றிணைவதை எதிர்ப்பவர்கள் தங்களது விரோதப் போக்கைக் கைவிட்டு, நாடுகளுக்கிடையே புதிய உறவுக்கு பாதை அமைக்க வேண்டும்.
வட கொரியாவை பொருளாதார வல்லமை மிக்க நாடாக மாற்ற வேண்டும், பாதுகாப்புத் துறை, கூடுதல் திறன் மிக்க ஆயுதங்களால் வலுப்படுத்தப்பட வேண்டும்.
நமக்கே உரித்தான தொழில்நுட்ப பங்களிப்புடன் இராணுவம் மேம்படுத்தப்படும் போது, மக்களின் பாதுகாப்பான மகிழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.
இந்நூற்றாண்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டை பொருளாதார வல்லரசாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். |