நோர்வே செய்தி
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கிடந்த மர்ம பொருளால் பீதி
[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:46.03 மு.ப GMT ]
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதரக ஊழியர்களுக்கு ஏற்பட்டதால், உடனே பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தூதரகத்தில் இருந்த அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தூதரகம் அமைந்துள்ள சாலை முக்கிய சுற்றுலா பகுதி என்பதால் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அந்த சாலை முழுவதும் பொலிஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகள், தீயணைப்பு வண்டிகள் தயாரான நிலையில் நின்றிருந்தன.

வெடிகுண்டு தோற்றத்தில் இருந்த அந்த பொருளை நிபுணர்கள் ஆராய்ந்தனர். அது உடற்பயிற்சி செய்யும் உருளை என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு பீதி ஒருவழியாக நீங்கி சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தூதரகத்தில் இயல்பு நிலை திரும்பியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை
பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை
குறைவாக சம்பளம் வாங்கும் இஸ்ரேல் நாட்டு அதிபர்..!
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]