ஜேர்மனி செய்தி
ஹிட்லரை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜேர்மானிய பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 02:07.27 பி.ப GMT ]
ஜேர்மனியினை ஆட்சி செய்த சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் தன்னை யாராவது விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தான் உண்ணும் உணவை முதலில் 15 இளம் பெண்களை சாப்பிட வைத்து பின்னர் தான் சாப்பிட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

இவர் இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் போலாந்திலுள்ள உல்ப்ஸ் லையர் என்னும் பாதுகாப்பான இடத்தில் இருந்தார்.

அப்போது அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த மார்கட் வோயல்க் என்ற பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து தனது 95வது வயதில் அவருடன் இருந்த தனது அனுபவங்களை உலகிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். அவரிடம் நான் பணிபுரிந்த காலத்தில் அவர் மாமிசம் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. பிரிட்டன்காரர்கள் தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், அவரது உணவை சாப்பிட்டு விஷம் உள்ளதா என்பதை கண்டறிய 15 இளம் பெண்களை பணியமர்த்தி இருந்தார்.

அதில் நானும் ஒருத்தி. போர் காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் ஹிட்லருக்கு வழங்கப்படும் சுவையான உணவை ருசி பார்த்தோம். ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்திலேயே அதை ரசித்து சாப்பிட்டதில்லை.

ஒவ்வொரு வேளையும் உணவை சாப்பிடுகையில் இது தான் நம் கடைசி உணவு என்று நினைப்போம். போர் மோசமடைந்ததையடுத்து நான் பெர்லினுக்கு சென்றுவிட்டேன். அதன் பின்னர் என்னுடன் பணிபுரிந்த 14 பேரையும் ரஷ்ய படை சுட்டுக் கொன்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சீக்கியரை தாக்கிய வெள்ளை இனத்தவர்கள்: சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)
கழிவறைக்குள் வைத்து ரகசியமாக குழந்தையின் உயிரை பறித்த தாய்
சட்டென கிராமத்திற்குள் புகுந்து…30 பேரின் தலையை துண்டித்து வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
வீழ்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்: மீண்டது சதாம் உசேன் நகரம் (வீடியோ இணைப்பு)
எங்களை அங்கீகரித்துவிட்டனர்: குதூகலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (வீடியோ இணைப்பு)
ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்: பயத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள் (வீடியோ இணைப்பு)
7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்கும் ரஷ்ய விமானம் (வீடியோ இணைப்பு)
அன்பு மகனை கொன்று ஆசை கணவனுக்கு பரிசாக அளித்த கொடூர தாய்
துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட வழக்கறிஞர்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு... தீவிரவாதியின் வேலையா? (வீடியோ இணைப்பு)
20 பெண்களுடன் உல்லாசம்.. 40 குழந்தைகளை பெற்ற தந்தையின் லட்சியம்! (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: பாலசுப்பிரமணியம் சூரியகுமாரன்
பிறந்த இடம்: யாழ். புலோலி மேற்கு
வாழ்ந்த இடம்: ஜெர்மனி, லண்டன்
பிரசுரித்த திகதி: 31 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெயர்: பூபதி குலசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவீடன்
பிரசுரித்த திகதி: 30 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 07:33.21 மு.ப ] []
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கி விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: வெட்ட வெளிச்சமான துணை விமானியின் திடுக் தகவல்கள் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 06:55.53 மு.ப ] []
ஜேர்மன் விமானத்தின் துணை விமானி தற்கொலை உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. [மேலும்]
திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவா? நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜோடி
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 06:39.58 மு.ப ] []
ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். [மேலும்]
உலகின் பலமான குள்ள மனிதரை திருமணம் செய்த திருநங்கை
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 03:56.51 பி.ப ] []
டென்மார்க்கை சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவரை உயரமான திருநங்கை திருமணம் செய்துள்ளார். [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: துணை விமானியின் கடைசி வார்த்தைகள்…மலையில் மோதும் வரை திக் திக் நிமிடங்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 10:51.45 மு.ப ] []
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]