| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| 250 ஆண்டுகால பழமையான கோவில் தீயில் கருகி நாசம் |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:45.22 மு.ப GMT ] |
ஜப்பானில் 250 ஆண்டுகால பழமையான கோவில் தீயில் தீப்பற்றி எரிந்து நாசமானதால், மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.ஜப்பானின் நகானோ மலைப் பகுதியில் அமைந்துள்ளது டோகுமஞ்சி என்ற புத்த மதக் கோவில்.
இது கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பு முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் நூற்றாண்டில் இருந்து இந்த கோவிலில் மக்கள் ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கோவிலில் தீப்பற்றியது, மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் தீ மளமளவென எல்லா இடங்களிலும் பரவியது. இதில் கோவில் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கோவில் தலைவராக இருக்கும் துறவியின் வீட்டில் முதலில் தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த கோவில் முழுவதும் பரவியுள்ளது. இதில் 355 சதுர மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கோவில் முற்றிலும் சேதம் அடைந்தது, இரவில் தீப்பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த 1847ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அப்போது பல நினைவு சின்னங்கள் அழிந்துவிட்டன.
அந்த பூகம்பத்தில் இருந்து டோகுமஞ்சி கோவில் தப்பியது. ஆனால், தீயில் இப்போது கருகிவிட்டது. நாட்டின் அரிய கோவில் ஒன்றை நாங்கள் இழந்து விட்டோம் என்று சோகமாக தெரிவித்தனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய பிரதமர் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:49.52 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] | | அபுதாபியில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:11.35 மு.ப ] |
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் இருவர் மண் சரிந்து பலியாயினர். [மேலும்] | | கோக்க-கோலா ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு விற்க போவதாக மிரட்டும் அமெரிக்கர்: பரபரப்பு தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:34.04 மு.ப ] |
பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்] | | மாயன் காலத்து பிரெமீடுகள் இடிப்பு: திடுக்கிடும் தகவல் |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:09.33 மு.ப ] [ ] |
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் மாயன் இனத்து மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர். [மேலும்] | | தற்கொலையை வெப்கமெராவில் பதிவு செய்த தமிழக பெண் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:39.35 மு.ப ] |
பக்ரைன் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட தமிழகப் பெண் சீதாலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|