ஜேர்மனி செய்தி
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணுக்கு உதவ மறுத்த கத்தோலிக்க மருத்துவமனைகள்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 11:29.08 மு.ப GMT ]
பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்ற போது உரிய மருந்தோ ஆலோசனையோ வழங்காமல் அலைக்கழித்த கத்தோலிக்க மருத்துவமனைகளால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து ஜேர்மன் மருத்துவர் கழகம் St vinzenz - Krankenhaus மற்றும் Heilig - Geist - Krankenhaus என்ற அந்த இரண்டு மருத்துவமனைகளையும் கடுமையான விமர்சித்துள்ளது.

கடந்த மாதம் கோலோன் நகரில் நடந்த மதுபான விருந்தில் அதிகமாகக் குடித்து மயங்கிக் கிடந்த 23 வயது இளம்பெண்ணை மர்மநபர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர்.

காலையில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவள் கால்க் மாவட்டத்தில் ஒரு ஆற்றங்கரையோரமாகக் கிடப்பது தெரிந்தது.

இதனையடுத்து அந்த பெண் அருகிலிருந்த கத்தோலிக்க மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர்கள் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அந்த மருத்துவமனையிலும் அவளுக்கு மருந்தோ ஆலோசனையோ வழங்கவில்லை. வேறு மருத்துவமனைக்குப் போகுமாறு அறிவுறுத்தினர்.

இது குறித்து கோலோன் கத்தோலிக்கப் பேராயத்திடம் கேட்டபோது, அவசரகால கட்டத்தில் கூட கருத்தடை செய்வதோ கருச்சிதைவு செய்வதோ கிடையாது என்பது கத்தோலிக்க மருத்துவமனைகளின் பொதுவான கொள்கையாகும்.

இந்தப் பெண்ணுக்கு இதுதவிர வேறு சிகிச்சைகள் தேவைப்படுமாயின் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்று தெரிவித்தது.

நேற்று Marleurger Bund என்ற மருத்துவர் கழகம் (MB), கடமையைச் செய்யத்தவறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளது.

MB கழகத்தின் தலைவரான ருடோல்ஃப் ஹென்கே, இப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்றார்.

மேலும் மருத்துவமனை மேலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான புரிதல் இன்மையே இப்பிரச்னைக்குக் காரணமாயிற்று என்றும் தெரிவித்தார்.

நார்த் ரைன் - வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம், கத்தோலிக்க மருத்துவமனைகள் சட்டத்தை மீறிச் செயல்பட்டனவா என்பதை அறிய விசாரணை தொடங்கியிருப்பதாக தெரிவித்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உளவு பார்த்ததால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
விண்வெளி ஆய்விற்கு செல்லும் முதல் பிரிட்டன் விண்வெளி வீரர்
முஷரப்பை மறுபடியும் நாடு கடத்த திட்டம்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]