அமெரிக்க செய்தி
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 11 வயது மாணவனால் பரபரப்பு
[ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 07:38.51 மு.ப GMT ]
அமெரிக்காவில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கனக்டிக்கட்டில் உள்ள சாண்டி ஹீக் தொடக்க பள்ளியில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.

இந்நிலையில் உடாவின் மேற்கு கியர்ன்ஸ் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்துள்ளான்.

அவன் பையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து பயந்துபோன 2 மாணவர்கள் இது குறித்து ஆசிரியையிடம் தெரிவித்தனர். அவர் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் விரைந்து வந்து துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த சிறுவன் தன் துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பவில்லை.

ஆனால் சக மாணவன் ஒருவனின் தலையில் துப்பாக்கியை வைத்தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, யாராவது தன்னை துப்பாக்கியால் சுட்டால் தற்காத்துக் கொள்ளவே தான் துப்பாக்கி கொண்டு வந்தததாகத் தெரிவித்துள்ளான்.

பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த மாணவனின் பெயரைத் தெரிவிக்க பொலிஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி அரசு
பிரிட்டனில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பாதியிலேயே தரையிறங்கிய விமானம்: இருவர் கைது
போகும் இடமெல்லாமல் 60 கிலோ எடையுள்ள தன் வீட்டை சுமந்து செல்லும் சீன நபர்
கேன்ஸ் திரைப்பட விழாவில் மீண்டும் ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருட்டு
சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்த அபாயம்
பாகிஸ்தானில் பள்ளி வாகனத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 17 குழந்தைகள் உடல் கருகி பலி
ஜப்பான் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?
பெண்ணை போகப் பொருளாக கருதும் மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் எதிர்ப்பு
துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] []
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] []
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்]
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ]
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]