அமெரிக்க செய்தி
இன்று உலகம் அழியும் பீதி: அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் கண்காணிப்பு
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 08:18.26 மு.ப GMT ]
மாயன் காலண்டர் டிசம்பர் 21ம் திகதியுடன் நிறைவடைவதால் இன்றுடன் உலகம் அழிந்து விடுமோ என்ற பீதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

அது வெறும் கற்பனைதான் உலகம் அழியாது என்று விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இருந்தும் சிலர் அதை நம்ப மறுக்கின்றனர்.

மாயன் இனத்தவர் விண்ணியல் சாஸ்திரத்தில் வல்லுனர்கள். அவர்கள் வகுத்த நியதிப்படி இதுவரை பல விடயங்கள் நடந்துள்ளது. அதுபோன்று இதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர்.

இதற்கிடையே உலகம் அழிய வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக சொன்னாலும் அதுகுறித்த கண்காணிப்பு பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இங்கிலாந்துக்கு சொந்தமான கேமேன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் அரிசோனா ஆகிய இடங்களில் 'டெலஸ்கோப்' மூலம் வானம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பூமியின் மீது ராட்சத எரிகற்கள் விழுகிறதா? சூரியனிடம் இருந்து கடும் வெப்பம் வெளியாகிறதா? அல்லது வேற்று கிரகங்கள் தாறுமாறாக வந்து பூமியை தாக்குகின்றனவா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது ஸ்லூ என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வானவியல் இதழின் செய்தி தொகுப்பாளர் பாப் பெர்மான் அதற்குரிய வர்ணனை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் மெக்சிகோவில் மாயன் காலண்டர் உருவான மெரிடா பகுதியிலும் மற்றும் உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் பெரும்பாலானவர்கள் கூடியுள்ளனர்.

உலகம் அழியும் என்ற பீதி ரஷ்யாவிலும் கிளம்பியுள்ளது. எனவே, அதை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக அழிவில் இருந்து தப்ப தெற்கு பிரான்சில் புகாராக் என்ற ஆன்மீக மலையில் தஞ்சம் அடையலாம் என்று வதந்தி பரப்பப்பட்டது அதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

அதேபோன்று துருக்கியில் உள்ள சிரின்ஸ் என்ற நகரம் உலகம் அழிவில் இருந்து தப்பும் என்ற கருத்து நிலவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர்.

அதேபோன்று செர்பியாவில் ரிடாஞ்ச் மலை பகுதி அதிசய மந்திர சக்தி வாய்ந்தது. அப்பகுதியில் தங்கினால் உலகம் அழிவில் இருந்து தப்பலாம் என்ற மூடநம்பிக்கை பரவியுள்ளது.

இதனால் அந்த மலையை சுற்றியுள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு முடிந்து மக்கள் நிரம்பியுள்ளனர்.

இன்று உலகம் அழியும் என்ற பீதி சீனாவிலும் கிளம்பியுள்ளது. 'அல்மிட்டி காட்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பீதியை ஏற்படுத்தினர்.

இதற்கிடையே ஹெபி மாகாணத்தைச் சேர்ந்த லியூ கியூவான் என்ற விவசாயி கண்ணாடி இழையால் ஆன பெரிய கூண்டுகளை தயாரித்துள்ளார். அதில் தலா 14 பேர் தங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் அழியும்போது அதில் பதுங்கி கொண்டால் கடும் புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளில் இருந்து தப்ப முடியும் என்று பிரசாரம் செய்தார்.

அதை நம்பி ஏராளமானவர்கள் முன்பதிவு செய்து அதற்குள் பதுங்கியுள்ளனர். ஆனால் உலகம் அழியும் என்ற பீதியை நம்பவேண்டாம் என சீன பொலிசார் இணையதளம் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்
பிரிட்டன் மோசடிக்காரர் பிரான்ஸ் சிறையில் தூக்கு
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஜவர் பலி..!
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு: சுற்றுலாப் பயணம் ரத்து
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீப் பரவல்! ஹீத்ரோ ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன! (காணொளி இணைப்பு)
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள்
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்]
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ]
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ]
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்]
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]