| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| ஹிலாரி கிளிண்டன் பதவிக்கு ஜான் கெர்ரியின் பெயரை பரிந்துரைத்தார் ஒபாமா |
| [ சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012, 04:27.18 மு.ப GMT ] |
அமெரிக்காவின் அடுத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவிக்கு ஜான் கெர்ரியின் பெயரை ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பதவி வகித்து வருகிறார்.
இவருடைய பதவி காலம் முடிவடைவதையொட்டி, புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சரை தெரிவு செய்யும் பணியில் ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், வெளிவிவகார கமிட்டி செனட் உறுப்பினருமான ஜான் கெர்ரியின் பெயரை ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.
ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்துள்ள ஜான் கெர்ரி, அமெரிக்காவுடன் அதிருப்தி கொண்டிருந்த பல நாடுகளுடனான உறவை சீர்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், சுட்டுக் கொல்லப்பட்டப் பின்னர் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான கசப்புணர்வை மாற்ற ஜான்கெர்ரி பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இவரை வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிப்பதற்கு குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு அளிப்பார்கள் என மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|