| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை அமோகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 10:27.45 மு.ப GMT ] |
துப்பாக்கி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுவடைந்து வரும் அதே நேரத்தில் அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது.அமெரிக்காவில் கடந்த மாதங்களில் சீக்கிய கோயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு, கடந்த வாரம் ஆரம்ப பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களையடுத்தும் துப்பாக்கி விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய புலானாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் நோக்கில், துப்பாக்கிகளை விற்கும் சிறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
எனினும், அமெரிக்காவின் தொடர் வணிக நிறுவனங்களான டிக் ஸ்போர்ட்டிங் குட்ஸ் (Dick's Sporting Goods) தனது 480 கிளைகளிலும் செமிஆட்டோமெட்டிக் (semiautomatic) துப்பாக்கிகளின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
இதேபோல், மற்றொரு தொடர் வணிக நிறுவனமான வால்மார்ட்டும் ஆன் லைன் மூலமாக துப்பாக்கிகள் பதிவு செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ளது.
எனினும் சிறிய அளவிலான கடைகள் துப்பாக்கிகளை பெருமளவில் விற்பனை செய்து வருகின்றன.
பெருகி வரும் ஆபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவே துப்பாக்கிகளை வாங்குவதாக பொதுமக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், முன்கூட்டியே அவற்றை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் ஒருசிலர் கூறுகின்றனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|