ஜேர்மனி செய்தி
இஸ்லாம் மதத்துக்கு மாற சொல்லி இளைஞன் மீது தாக்குதல்: நாக்கை துண்டித்த கொடூரம்
[ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 05:46.22 மு.ப GMT ]
இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி இந்திய மாணவன் மீது ஜேர்மனியில் கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது குறித்து ஜேர்மன் பொலிசார் கூறுகையில், ஜேர்மனியின் பான் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இந்திய மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

வழியில் அவரை மறித்த சிலர் மாணவருடைய மதத்தைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவரும் கூறியிருக்கிறார்.

ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். மாற மாட்டேன் என்று சொன்னால் மாணவனுடைய நாக்கை அறுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுக்கவே அவரைக் கொடூரமாகத் தாக்கி, நாக்கையும் அறுத்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்தக் காயங்களால் துடித்துக்கொண்டிருந்த மாணவனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரைத் தாக்கியவர்கள் தீவிர மதவாதிகளாக இருக்கலாம், அவர்களைப் பற்றிய அடையாளமோ, சரியான விவரமோ மாணவனுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவத்தின் அடிப்படையில் அவர்களைத் தேடி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறைத் தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]