| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்: அதிகரித்து வரும் எதிர்ப்புகள் |
| [ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:37.02 மு.ப GMT ] |
செவிலியர் ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வலியுறுத்தி உள்ளார்.பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு காரணமான அவுஸ்திரேலிய வானொலி தொகுப்பாளர்களான மெல் கிரெய்க் மற்றும் மைக்கேல் கிருஸ்டியன் ஆகியோருக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரிட்டன் அரச நீதி விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெஸிந்தா தற்கொலை குறித்து அரச நீதி விசாரணைக்குழு என்ன முடிவு எடுத்தாலும், அவுஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது என்று லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸ் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஜெஸிந்தா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தப்பிக்கக் கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|