ஏனைய செய்தி
கென்யாவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்: குழந்தைகள் உள்பட 30 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 02:38.01 மு.ப GMT ]
கென்யாவில் வணிக வளாகம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்துக்குள் சனிக்கிழமை ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் நுழைந்தது. திடீரென்று அக்கும்பல் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தது.

இதில், அந்த வணிக வளாகத்தில் பொருள்கள் வாங்க வந்திருந்தவர்கள், கடைக்காரர்கள் என 30 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இத்தாக்குதலால் பீதியடைந்த பலரும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வீதியை நோக்கி ஓடினர்.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸாரும், பாதுகாப்புப்படை வீரர்களும் அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் அங்குள்ள ஒவ்வொரு கடையாகச் சென்று தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தேடினர்.

வணிக வளாகத்தில் உள்ள நகுமாட் சூப்பர் மார்க்கெட் பகுதியில் அந்த நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கடையில் இருந்து 3 உடல்களைக் கண்டெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சில கடைகளின் தரைதளங்களில் ரத்தக்கறை படிந்திருந்தன. ஆங்காங்கே தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. வளாகத்தில் உள்ள சிலரை தாக்குதல்காரர்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சில உள்ளூர் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. எனினும் இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இத்தாக்குதலில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 பேர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 1998ல் அல்-கொய்தா நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு அங்கு நடந்துள்ள பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இரட்டையர்கள் இறந்துபோனால் தெய்வமாக வழிபடும் பழங்குடியினர்: அவர்களின் உருவபொம்மையை பள்ளிக்கு அனுப்பும் விநோதம் (வீடியோ இணைப்பு)
பிறந்த குழந்தையை கொன்று 3 மாதம் வரை பாதுகாத்த தாய்: நண்பரின் உதவியால் கைது செய்த பொலிஸ்
தங்களுக்கென தனி நாணயத்தை வெளியிட்ட ஐ.எஸ்.அமைப்பினர்: அமெரிக்க டோலரை விட 100 மடங்கு மதிப்புமிக்கது (வீடியோ இணைப்பு)
பல் பொருள் அங்காடியில் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: மீட்டு ஒப்படைத்த பொலிஸ்
ஊழல் புகாரில் சிக்கிய மலேசியா பிரதமருக்கு எதிராக போராட்டம்: இரண்டாம் நாளிலும் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
’கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம்’: பிரபல பாடகரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை
மகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற்கும் அகதி: குவியும் நிதியுதவி
தவறான செய்தி வெளியிட்ட நிருபருக்கு 3 ஆண்டுகள் சிறை: கனடா, அமெரிக்க நாடுகள் கடும் கண்டனம்
இலங்கையில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்தானதா?: ஆதாரங்களை வெளியிட்ட ஜேர்மன் மருத்துவர்
கார் ஓட்டிக்கொண்டு குழந்தைக்கு பாலூட்டிய தாய்: அபராதம் விதித்த பொலிஸ்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அழுகிய நிலையில் மனித சடலங்கள்: குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஓகஸ்ட் 2015, 12:10.24 மு.ப ]
ஆஸ்திரியா அருகே ஹங்கேரி நாட்டின் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் 70க்கும் மேற்பட்ட அழுகிய நிலையில் மனித சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். [மேலும்]
நான்கு குழந்தைகளுடன் பிரித்தானியாவில் இருந்து தலைமறைவான பெண்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஓகஸ்ட் 2015, 12:05.53 மு.ப ] []
பிரித்தானியாவில் இருந்து நான்கு குழந்தைகளுடன் தலைமறைவான பெண்மணி, சிரியா சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்திருக்கலாம் என Scotland Yard பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். [மேலும்]
பள்ளி மாணவியை 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ஆசிரியர்: அதிரடி கைது
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 08:27.31 மு.ப ] []
கனடா நாட்டில் உள்ள ஒன்றில் பயின்று வந்த மாணவி ஒருவரை தொடர்ந்து 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ஆசிரியரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். [மேலும்]
லிபியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: பரிதாபமாக பலியான 200 அகதிகள்
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 07:28.34 மு.ப ] []
லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் இருந்த 200 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். [மேலும்]
ஒரே பெயருடைய பெண்களை குறிவைத்து மிரட்டும் மர்ம நபர்: பொலிஸ் போர்வையில் சுற்றுவதால் பரபரப்பு
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 06:46.48 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் பொலிசார்  எனக் கூறி மர்மநபர் ஒருவர், ‘ஜோசெட்’ என்ற பெயருடைய பெண்களை மிரட்டிவருவதை தொடர்ந்து அவரை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். [மேலும்]