அமெரிக்க செய்தி
அமெரிக்காவில் 24 அங்குல ரத்த உறைவை அகற்றி மருத்துவர்கள் சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 03:00.48 மு.ப GMT ]
அமெரிக்காவில் நோயாளி ஒருவரின், ரத்தக் குழாயில் 24 அங்குலத்திற்கு உறைந்திருந்த ரத்தத்தை, நவீன சிகிச்சை மூலம் வெளியேற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டோட் டுன்லாப். 62 வயதான இவர், கடந்த மாதம் இங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்பட்டததையடுத்து இதயத்திலும் கோளாறு இருப்பதாக தான் உணர்வதாக டொக்டர்களிடம் அவர் கூறினார்.

அவரை பரிசோதித்த டொக்டர்கள் சிடி ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர். சிடி ஸ்கேன் செய்ததில், டொக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டுன்லாப்பின் கால் மற்றும் இதயத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் 24 அங்குலத்துக்கு ரத்தம் உறைந்து இறுகிப் போயிருந்தது.

இதை, ஓபன் ஹார்ட் சர்ஜரி மூலம் சரி செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என்று எண்ணிய டொக்டர்கள், “ஆன்ஜியோ வேக்” என்ற உறிஞ்சும் சிகிச்சை மூலம் சரி செய்ய முற்பட்டனர்.

டொக்டர்களின் அறிவுரையை டுன்லாப்பும் ஏற்றுக் கொண்டதால் அவருக்கு “ஆன்ஜியோ வேக்” சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வயிறுக்கும், தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பைப் செருகப்பட்டது. மற்றொரு பைப், கழுத்து பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் இணைக்கப்பட்டது.

நவீன உபகரணத்தின் மூலம், வெற்றிடத்தை ஏற்படுத்தி ரத்த உறைவை உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமாக ரத்த உறைவு வெளியேற்றப்பட்டது.

உடனடியாக, புது ரத்தம் அந்த பகுதியில் செலுத்தப்பட்டது. மூன்று மணி நேரத்தில் இந்த சிகிச்சை முடிந்தது. இந்த சிகிச்சையில், டுன்லாபின் ரத்த ஓட்டம் சீரடைந்து இதயம் சரியான முறையில் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆக்சிஜன் சரியான அளவில் அனைத்து பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. மூச்சு திணறல் பாதிப்பும் மறைந்து விட்டது.

மருத்துவமனையில், மூன்று நாட்கள், மருத்துவரின் கண்காணிப்பில் டுன்லாப் இருந்தார். இவர், நான்காவது நாள் வீட்டிற்கு சென்று சர்வ சாதாரணமாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஆபத்தான சிகிச்சையாக இருந்தாலும் டொக்டர்களின் சிறப்பான செயல்பாடுகளால் டுன்லாப் குணமடைந்து உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது: பிரான்ஸ் ஜனாதிபதி
குட்டி முயலை பார்த்து ரசிக்கும் குட்டி இளவரசர்
தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ்! ஆசிரியை கைது
ஒரு வருடமாக வாயை திறக்கவில்லை! அரியவகை நோயினால் அவதிப்படும் குழந்தை
அட்டை பூச்சிகளின் உதவியுடன் உயிர் பிழைத்த பெண்
கப்பல் விபத்து திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும்!
கடவுளின் தூதர் பகாவுல்லா (வீடியோ இணைப்பு)
பூமியின் மீது மோதிய விண்கற்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது
நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்
ஜேர்மன் எரிவாயுவை பயன்படுத்தலாம்: ஐரோப்பிய ஒன்றியம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: சரவணை மேற்கு வேலணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அப்படியே ஒரு குத்தாட்டம் போடுங்க! மிஸ் அமெரிக்காவை ஆடச்சொன்ன மாணவன் சஸ்பெண்ட்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 09:12.12 மு.ப ] []
'மிஸ் அமெரிக்கா' நினா டவுலூரியை நடனமாடச் சொன்ன பள்ளி மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
7 வயது இரட்டை பிறவிகளின் துணிச்சலான செயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 08:43.51 மு.ப ] []
அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
உலகின் மிக உயரமான கோபுரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 07:38.07 மு.ப ] []
உலகிலேயே மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்ட சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்]
உல்லாசத்துக்கு மறுத்த வாலிபர்! கத்தியால் குத்திய அழகிக்கு சிறைத்தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 06:37.37 மு.ப ] []
தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
2 லட்சத்திற்கு சாப்பிடும் முயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 02:59.53 மு.ப ] []
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார். [மேலும்]