| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலியாவின் கடற்படை கப்பலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் |
| [ சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2012, 01:41.24 மு.ப GMT ] |
அவுஸ்திரேலியாவில் கடற்படை கப்பலில் இருந்த ஆயுதங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அவுஸ்திரேலியாவின் எச்எம்ஏஎஸ் கூனவாரா என்ற கடற்படை ரோந்து கப்பலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பாதுகாவலரை தாக்கி கட்டி போட்டு உள்ளனர்.
பின்னர் கப்பலில் ஆயுதங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று, அங்கிருந்த துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த படகிலேயே தப்பி சென்றனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கொள்ளையர்கள் இராணுவத்தினரை போன்று உடை அணிந்து வந்ததாகவும், இக்கப்பலை பற்றிய முழு விவரமும் அவர்களிடம் இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இக்கப்பலில் 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்களால் தாக்கி கட்டி போடப்பட்ட பாதுகாவலர், நீண்ட போராட்டத்துக்குப் பின் தன்னை விடுவித்துக் கொண்டு எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார். அதன் பின்னரே அக்கப்பலில் அசம்பாவிதம் நடந்துள்ளது தெரியவந்தது.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ள கடற்படையிடமே கொள்ளை நடந்துள்ளது அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] [ ] |
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்] | | பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ] |
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|