நோர்வேயில் 7 வயது பள்ளி சிறுவனை அடித்து துன்புறுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர் நோர்வேயில் வசிக்கின்றனர்.
இவர்களது ஏழு வயது மகன் ஓஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.
சமீபத்தில் இச்சிறுவன் தன்னை தனது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக, பள்ளி ஆசிரியையிடம் புகார் செய்துள்ளான்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பொலிசுக்கு தகவல் அளிக்கவே, அவர்கள் அச்சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.
இது குறித்து நோர்வே பொலிஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், சிறுவனின் உடலில் சூடு வைத்த காயமும், தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே தான் அவர்களை கைது செய்துள்ளோம் என்றார்.
இந்நிலையில் ஓஸ்லோ நகர நீதிமன்றம் இன்று சந்திரசேகர்- அனுபமா தம்பதிக்கு தண்டனை காலத்தை அறிவித்தது.
இவர்களுக்கு ஒன்றரை ஆண்டு வரை சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

|