இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மானிய படைவீரர்கள் தம் நண்பர்களுக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் பட்டுவாடா ஆகாமல் ஜெர்ஸித் தீவில் இருந்தன.நாஜிப் படைவீரர்களுக்கு எதிரான இந்தத் தீவின் இளைஞர்கள் இவற்றை டிசம்பர் 1941ம் ஆண்டில் திருடி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஜெர்லி தீவில் உள்ள தொல்பொருள் காப்பகம் அங்கிருந்த பழைய பொருட்களை எல்லாம் சேகரித்து ஜெர்மனிக்கு அனுப்பியதில் இந்தக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளும் இருந்தன.
மஞ்சள் நிறத்தில் பழுப்பேறிய போன வாழ்த்துமடல்களில் 'Merry Christmas and a Healthy Ney Year Wishes You Soldier Emil Adam', Gretings to Maier, Fricher, and Melcher' என இருந்தது.
இம்மடல் ஹெஸ்ஸி மாநிலத்தில் முஹ்ல்ஹீம் சும் மெய்ன் நகரில் வாழும் எஸ்கெல்பெர்ட் ஜோசஃப் பெர்கமானிடம் கொடுக்கப்பட்டது.
அது அவருடைய தாத்தாவுக்கு வந்த வாழ்த்துமடல். அதைப் பெற்றதும் அவருடைய உணர்ச்சிகளை அவரால் விவரிக்க இயலவில்லை.
ஜேர்மனியில் தபால்துறையினர், இந்த மடல்களையும், கடிதங்களையும் கொண்டு வந்து கொடுத்த போது சிலர் வாங்க மறுத்ததாகவும் கூறினர்.
தங்கள் முன்னோர்கள் நாஜி ஆதரவாளராக இருந்ததை இப்போது இந்த மடல்கள் அம்பலப்படுத்திவிடும் என்ற காரணத்தினால் இவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
ஆனால், ஜெர்சி தபால்துறையின் மைக்கேல் மெக்னல்லி தொல்பொருள் காப்பகத்தில் இருந்த கடிதங்களை முடிந்தவரை உரியவரிடமோ அவர்களின் வாரிசுகளிடமோ சேர்த்து வருவதாகக் கூறினார்.

|