விலங்கு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை தன்னிடமே ஒப்படைக்குமாறு யாஸ்மின் நகுடா என்ற பெண் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.
கடந்த 9ஆம் திகதியன்று வடக்கு டொரொண்டோவில், ஐக்கியா என்ற அங்காடிக்குள் நுழைந்த குரங்கு குட்டி அட்டகாசம் செய்தது.
உடனடியாக விரைந்து வந்த பொலிசார் குரங்கு குட்டியை பிடித்து, விலங்கு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அதை தன் மகன் போல் வளர்த்ததாக கூறி வரும் யாஸ்மின், தன்னிடமே மறுபடியும் ஒப்படைக்கும் படி டொரொண்டே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.
இதுகுறித்து யாஸ்மின் அளித்த பேட்டியில், டார்வினை ஒருபோதும் நான் விலங்காக கருதியது கிடையாது. ஒரு மனிதனை போன்றே என்னை புரிந்து கொண்டுள்ளது. நானும் டார்வினை என் மகனாகவே கருதுகிறேன்.
யூடியூப்பில் வெளியிடப்பட்ட காணொளியால் டார்வினுக்கும், எனக்கும் ஆதரவு பெருகி வருகிறது என்று தெரிவித்தார்.
ஆனால் விலங்கியல் நிபுணரான ஆண்டுரூ வெஸ்ட்டோல் கூறுகையில், குரங்கு குட்டியாக இருக்கும் போது குழந்தை போலப் பழகும். ஆனால் அதுவே வளர்ந்துவிட்டால் முரடாகிவிடும்.
அதன் பின் நம்மால் அதை கட்டுப்படுத்த முடியாது. அதன் தேவைகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. எனவே அதை காப்பகத்தில் விடுவதே ஏற்புடையது என்றார்.
மேலும் இவ்வாறு மனிதரிடம் வளரும் குரங்குகள் பெரியதாக வளர்ந்ததும், பலரும் மிருகக் காட்சி சாலைக்கோ ஆராய்ச்சிக் கூடத்துக்கோ கொடுத்து விடுகின்றனர் என்றார்.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]